twitter
    Find out what I'm doing, Follow Me :)

உலகின் மிகச்சிறந்த ஆண்மகன்


                    தினமலரின் இணைய இதழை படித்துக் கொண்டிருந்த போது பார்வையில் பட்ட புகைப்படம்.  செய்திக்கான சுட்டி.

                நெடுநாட்களுக்கு பிறகு இந்த படித்த போது நெகிழ்ந்து போனேன். மதுரையில் ஒரு கல்லூரி பேராசிரியையின் மூக்கு பெரிதாக இருக்கிறது என்று சொல்லி கொடுமைபடுத்தி அந்த இளம் பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். பெற்ற பிள்ளை, மனைவியை தவிக்க விட்டு தனது காதலியோடு ( காதல்ல என்ன கள்ளகாதல் ) ஓடிப்போகும் கணவன்மார்கள் பற்றிய செய்திகளையே தினம் படிக்கும் நமக்கு இது புதுமையான செய்திதான்.

                   
// இதுகுறித்து நிஷாந்த் கூறுகையில், "உழைத்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையில்தான் சென்னைக்கு வந்தேன். ஆனால், பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டேன். என் மனைவி, குழந்தை மீது நான் அளவுகடந்த பாசம் வைத்துள்ளேன். பிச்சை எடுத்து கிடைக்கும் பணத்தில் அவர்களுக்கு முதலில் உணவு வாங்கி கொடுத்து விட்டு தான், பின் நான் சாப்பிடுவேன். கஷ்டத்திலும் மனைவி அளிக்கும் ஆறுதலான வார்த்தைகள் எனக்கு தெம்பு கொடுக்கும். அவளுக்கு கால்கள் இல்லை. வாழ்நாள் முழுவதும் அவளை நான் சுமப்பதை பெருமையாக கருதுகிறேன். விரைவில் வேலை தேடி குடும்பத்தை நல்ல முறையில் காப்பாற்றுவேன்' என நம்பிக்கையுடன் கூறினார் நிஷாந்த்.//



                                                                                       நன்றி : தினமலர் இணைய இதழ்

                     பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் பிறந்த இந்த பூமியில் தான். தன்னை மட்டும் நம்பி வந்த மனைவியும், இல்லறத்தின் பரிசாய் வந்த குழந்தையும், உச்சகட்ட வறுமையிலும் தூக்கி சுமக்கும் இந்த நிஷாந்த் உண்மையிலேயே...........



உலகின் சிறந்த ஆண்மகன்.









.

1 comments:

ஹரிஸ் Harish said...

நெகிழ வைத்த பகிர்வு.. நன்றி

Post a Comment

அண்மைய இடுக்கைகள்

மறுமொழி